கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் அடுத்த மாதம் மலர் கண்காட்சி.

0

 கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட நூற்றாண்டு விழாவையொட்டி அடுத்த மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது. இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத்தோட்டம் 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தற்போது சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

அரசு பழத்தோட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நூற்றாண்டு விழா அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழத்தோட்டத்தை ஒட்டியுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


 இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தா தேவி கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத்தோட்டத்திற்கு வந்தார். அவர் அங்கு அமைந்துள்ள அரசு பழத்தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவை நேரில் ஆய்வு செய்தார்.

 நூற்றாண்டு விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார். அவருடன் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஆறுமுகம், சரண்யா, தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)