பல கோடிக்கு விற்பனையான துணிவு ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமம்..

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து வரும் பொங்கலுக்கு துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியர் உட்பட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஓவர் சீஸ் ரிலீஸ் உரிமை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.


பிரபல நிறுவனம் ஒன்று துணிவு திரைப்படத்தின் ஓவர் சீஸ் உரிமையை 18 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விற்பனையாக இருப்பது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது...

Post a Comment

0Comments
Post a Comment (0)