அவர்களில் ஒருவர் தான் நடிகை சங்கீதா. பிதாமகன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த நிலையில் 22 வருடம் விஜயுடன் நட்புடன் பழகி வந்தாலும் தற்போது முதல் முறையாக வாரிசு படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
இந்த நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சி வாரிசு படம் பற்றி எக்ஸ்கியூஸிவ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்
அதாவது பல வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய் நடித்துள்ள பேமிலி என்டர்டைனர் திரைப்படம் தான் வாரிசு. பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்க்கும் படமாக இது இருக்கும் அது மட்டுமல்லாமல் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மெசேஜ் ஒன்று இந்த படத்தில் இடம்பெற்று இருக்கிறது என தெரிவித்துள்ளார். எல்லோரும் விஜய் சைலன்ட் என சொல்லுவார்கள் ஆனால் இத்தனை வருடத்தில் நான் சைலன்ட் விஜயை பார்த்ததில்லை.
வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தான் அவர் எவ்வளவு சைலன்ட் என்பதை தெரிந்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக