பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' திரைப்படம் வசூலில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'. 2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் படம் முதல் நாள் ரூ.3 கோடி அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டாம் நாள் ரூ.5.35 கோடியும், மூன்றாம் நாள் ரூ.6.25 கோடியும் வசூலித்து மொத்தம் மூன்று நாட்களில் படம் கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.