பெண் குழந்தையை பெற்றெடுத்த ஆலியா பட்!!… ரசிகர்களால் குவியும் வாழ்த்துக்கள்




பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு பெண்

குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்..

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்

இவர் கடந்த ஐந்து வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த ஆலியா தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றிருக்கும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்திருக்கிறார்.


அதாவது, இன்று காலை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது குழந்தை கைகளில். அழகான பெண் குழந்தை அவள். ஆசிர்வதிக்கப்பட்ட அன்பான பெற்றோராக மாறி இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்திக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை