மொட்டை மாடியில் அலறிய கணவர்.. முதல்ல க்ரீஷ்மா, அடுத்து ஜெஸ்லின், இப்ப சுஜி.. குமரிக்கு என்னதான் ஆச்சி...

0

குமரி மாவட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் அடுத்தடுத்து தொடர் பகீர் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இன்னொரு சம்பவமும் இப்போது நடந்து, மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

 

கடந்த மாதம் 14ம் தேதி தன்னுடைய வீட்டில் வைத்து ஷாரோனுக்கு, க்ரீஷ்மா கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்துள்ளார்.. உயிருக்கு உயிராக நேசித்த ஒரே பாவத்திற்காக, உயிரை விட்டார் ஒரு அப்பாவி இளைஞன்..

அதுவும் மரணத்தருவாயிலும், கடைசி நிமிட உயிர்பிரியும் நேரத்திலும், அவளை யாரும் தப்பா நினைக்காதீங்க என்று சொல்லி கடைசி மூச்சையும் நிறுத்தியுள்ளான்

ஸ்கெட்ச்


ஒன்றுக்கு பத்து முறை ஷரோனைக் கொல்ல முயன்று கடைசியாகத்தான் அதில் வென்றிருக்கிறார் கிரீஷ்மா. மிக மிக தெளிவாக ஸ்கெட்ச் போட்டு அந்த பையனை கொன்றுள்ளார். கடைசியாக கசாயம் என்ற பெயரில் அவர் கொடுத்த விஷத்தை சாப்பிட்ட ஷாரோனுக்கு வாந்தி வந்துள்ளது. தனது குற்றத்தை போலீஸாரிடம் கிரீஷ்மா ஒப்புக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வாந்தி


கடைசி நேரங்களில், இவர்களுடனான வாட்ஸ் ஆப் சாட்டிலும் கூட அந்தப் பையன் தனக்கு வந்த வாந்தி குறித்து கேட்டபோது ஒன்றுமே தெரியாத அப்பாவி போல அப்பெண் பேசியுள்ளார்.. அந்தப் பெண்ணை கவலைப்படாதே என்று இந்தப் பையனும் சமாதானப்படுத்தி விட்டு செத்துப் போயிருக்கிறான்.. அதற்கு முன்பு பலமுறை ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் போட்டி நடத்தி ஷாரோனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்ததை அவரே வாக்குமூலங்களில் ஒப்புக் கொண்டுள்ளார். 10 முறை கொலை செய்ய முயன்று, 11வது முறை கொன்றுவிட்டார்.

கிஃப்ட்ஸ்

இது இப்படி என்றால், அடுத்த நாளிலேயே, கன்னியாகுமரி நித்திரைவிளை பகுதியில் காதலியை கொல்ல முயன்றதாக அடுத்த புகார் கிளம்பியது.. 4 நாட்களுக்கு முன்பு, காதலனை போட்டுத்தள்ள ஒரு பெண், கூலிப்படையேயே ஏவியுள்ளார்.. இத்தனைக்கும் அந்த பெண்ணுக்கு வயது ஜஸ்ட் 19தான்.. ஜெஸ்லின் என்பது பெயர்... பிரவீன் என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார்.. தன் வீட்டிலேயே வந்து பெண் கேட்கவும் சொல்லி உள்ளார்.. இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், திடீரென பக்கத்து வீட்டு ஜெனித் என்ற டிரைவருடன் ஜெஸ்லினுக்கு கனெக்‌ஷன் ஆகிவிட்டது.

சுஜி பயங்கரம்


இதை பற்றி பிரவீன் கேட்டதற்குதான், கூலிப்படை வைத்து, சரமாரியாக தாக்கி உள்ளார்.. இதோ நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அந்த தம்பதி பெயர் ஜெய்சங்கர் - சுஜி.. கடந்த சில வருடங்களாவே ஜெய்சங்கர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு, ஜெய்சங்கர் சொந்த ஊர் திரும்பியபோது, மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இனிமேல், வெளிநாடு போகவேண்டாம் என்று முடிவெடுத்து, மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார் ஜெய்சங்கர்..

மொட்டை மாடியில்


இது சுஜிக்கு பிடிக்கவில்லை. தன்னால் இஷ்டப்படி இருக்க முடியவில்லை என்ற எரிச்சலில், அடிக்கடி ஜெய்சங்கருடன் தகராறும் செய்து வந்துள்ளார்.. ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை இவர்கள் சண்டையும் சென்றது.. சம்பவத்தன்று போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.. ஆனால், அன்றைய தினமே, அந்த கொடுமை நடந்துள்ளது.. மொட்டை மாடியில் இரவு தூங்கி கொண்டிருந்த ஜெய்சங்கர் மீது, சுட சுட வெந்நீரை கொண்டு வந்து ஊற்றிவிட்டார் சுஜி.. இதற்காகவே அவர் தூங்கும்வரை காத்திருந்து, வெந்நீரை கொதிக்க வைத்து மாடிக்கு எடுத்து வந்து ஊற்றியுள்ளார்..

அசரலையே


இதனால் அலறி துடித்து வலியால் கத்தியுள்ளார் ஜெய்சங்கர்.. ஆனால் சுஜி அசரலையே.. இப்படியே எனக்கு தொந்தரவாக வீட்டில் இருந்தால், எண்ணெய்யை கொதிக்க வைத்து ஊற்றி கொன்று விடுவேன் என்றாராம்.. இதை கேட்டு அப்படியே அதிர்ந்து போய் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஜெய்சங்கர்.. அதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துவிடவும், ஜெய்சங்கரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்... போலீசாருக்கும் தகவல் போயுள்ளது.. ஆனால், சுஜியை காணோம்.. அவரைதான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. நாளுக்கு நாள் இப்படியான பயங்கரங்கள் நடந்து வரும்நிலையில், குமரிக்கு என்னதான் ஆச்சு என்று கதிகலங்கி போயுள்ளனர் மக்கள்.Post a Comment

0Comments
Post a Comment (0)