நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்தது. இதனை இருவரும் மறுக்கவும் இல்லை.இந்நிலையில் இருவரும் தங்கள் காதலை சமீபத்தில், சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர்.
இப்போது இவர்கள் திருமண தேதி தெரிய வந்துள்ளது. வரும் 28ம் தேதி சென்னை அருகே நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடக்க இருக்கிறது. இதில் அவர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். பிறகு திரையுலகினருக்குத் தனியாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராமில் தன்னுடையப் பழைய புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு நடிகை மஞ்சிமா பதிலளித்த அவர், "‘இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற எளிய அழகான தளம். அது எந்த அளவிற்கு அழகானதோ, ஆபத்தானதோ என்று கவலையில்லை. அதனால், என்னுடைய பழைய புகைப்படங்களை நான் இன்ஸ்டாகிராமில் இருந்து தவிர்க்கிறேன். நான் மீண்டும் எல்லாவற்றையும் தொடங்குவேன்" என்று விளக்கம் கொடுத்துள்ளார் மஞ்சிமா.