'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த நடிகை கங்கனா ரணாவத்

0

'சந்திரமுகி 2’ படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.
'சந்திரமுகி' இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி, பி.வாசு இயக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்


முதல் பாகத்தைப்போல, இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்நிலையில், இந்தப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)