சமந்தா போல் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பியா

0

நடிகை சமந்தா போல நடிகை பியாவும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘பொய் சொல்லப் போறோம்’, ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’ உட்பட சில படங்களில் நடித்தவர், பியா. இவர், சமந்தாவைப் போல தானும் 'மையோசைடிஸ்’ என்கிற ‘தசை அழற்சி’ நோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2016ம் ஆண்டு, ஒரு நாள், காலில் வீக்கத்தை கவனித்தேன். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

மறுநாள் மற்றொரு காலும் வீங்கி இருந்தது. தசை வலியும் அதிகமாக இருந்தது. வலி இல்லாமல் உட்காரவோ, நிற்கவோ முடியவில்லை. பிறகு மருத்துவரிடம் பரிசோதனை செய்தேன். ‘தசை அழற்சி’ நோய் இருப்பது தெரியவந்தது. பயந்தேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்றேன்.

*/

Post a Comment

0Comments
Post a Comment (0)