கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

0

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. 8 மணி முதல் மாலை 4 மணி வரை மேள, தாளங்கள் முழங்க நேர்ச்சை கொடிகள் பவனி நடந்தது. மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை வகித்து மறையுரை வழங்கினார்.

2-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) முதல் 8-ம் நாள் திருவிழாவான 16ம் தேதி (வௌளிக்கிழமை) வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய ஆலயத்தில் திருப்பலியும், காலை 6.15 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. பின்னர் 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், பின்னர் திருப்பலியும் நடக்கிறது.


7 மற்றும் 8-ம் திருவிழா நாட்களில் இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடக்கிறது. 9ம் திருவிழாவான வருகிற 17ம்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. பின்னர் இரவு வாண வேடிக்கையும், புனித சூசையப்பரின் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. 10ம் நாளான 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது. காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கிலத் திருப்பலியும் நடக்கிறது. காலை 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது.

 பின்னர் 10.30 மணிக்கு மலையாளத் திருப்பலியும், பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி அல்காந்தர், இணை பங்குதந்தைகள் சகாய வினட் மேக்சன், ஜாண் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குபேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், பங்கு பேரவை நிர்வாகிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்குமக்கள் செய்து இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)