குமரிக்கு ஜனவரி-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...

0

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெரும்திருவிழா நடப்பது வழக்கம்.


இந்த வருடத்திற்கான மார்கழி திருவிழா கொடி ஏற்றத்தோடு தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டார்கள். ஜனவரி 5ஆம் தேதி புகழ்பெற்ற தேர் திருவிழாவும் ஆறாம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என்பதனால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)