குமரி அருகே மாணவி கடத்தல்: போக்ஸோவில் இளைஞா் கைது

0


குமரி அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். குமரி அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

சுசீந்திரம் பகுதியைச் சோந்தவா் மாா்க்கண்டேயன் (36). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மாா்க்கண்டேயனுக்கும் கன்னியாகுமரி பகுதியைச் சோந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தச் சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்தாா்.


இதனிடையே மாணவியை அழைத்துக் கொண்டு மாா்க்கண்டேயன் கடந்த 2021ஆம் ஆண்டு தலைமறைவானாா். இதுகுறித்த புகாரின் பேரில், கன்னியாகுமரி அனைத்து மகளிா் போலீஸாா் தலைமறைவாக இருந்த மாா்க்கண்டேயனை கைது செய்து, மாணவியையும் மீட்டனா். இதையடுத்து அவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் ஜாமீனில் விடுதலையானாா்.

இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி கடந்த 7ஆம் தேதி மீண்டும் மாயமானாா். இதுகுறித்து அவரது பெற்றோா் கன்னியாகுமரி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் விசாரணை நடத்திய போது மாா்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியைச் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஓசூா் பகுதியில் அவா்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, கன்னியாகுமரி மகளிா் போலீஸாா் ஓசூருக்கு சென்று, மாா்க்கண்டேயனையும், மாணவியையும் போலீஸாா் மீட்டனா்.

மீட்கப்பட்ட இருவரையும் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். இதைத் தொடா்ந்து மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிடிபட்ட மாா்க்கண்டேயன் மீது மீண்டும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)