குடிசையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு... குமரி அருகே சோகம்.

0

கன்னியாகுமரி அருகே மெழுகு வர்த்தி ஏற்றியபோது குடிசையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அடுத்து உள்ள வடக்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவரது மனைவி ஷீலா (54). இவர்களுக்கு ஹரிஹரன் என்ற மகன் உள்ளனர். சங்கர நாராயணன் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இதனால் ஷீலா, தனது மகன் ஹரிஹரன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஷீலா வீட்டில் வெளிச்சத்திற்காக மெழுகு வர்த்தி ஏற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி சரிந்து குடிசையில் தீப்பற்றியது.


இதில் ஷீலா பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஷீலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)