பூக்கள் விலை 'கிடு கிடு' உயர்வு..

0

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.3500-க்கு விற்பனையானது.

 தோவாளை மார்க்கெட்

 குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும் குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் நெல்லை மாவட்டம் காவல்கிணறு, ஆவரைக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

 அதேபோல் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வார்கள். பண்டிகை காலங்களில் விலை அதிகமாகவும், மற்ற நாட்களில் குறைவாகவும் விற்பனையாகும்.


 மல்லிகை விலை உயர்வு

 தோவாளை மார்க்கெட்டுக்கு பூக்கள்வரத்து நேற்று குறைவாக இருந்தது. இதனால், பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் ரூ.1,500-க்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.2,000 உயர்ந்து ரூ.3,500-க்கும், ரூ.1000-க்கு விற்பனையான பிச்சி ரூ.750 உயர்ந்து ரூ.1,750-க்கும் விற்பனையானது.

பூக்களின் விலை 


உயர்வு குறித்து வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், "கடந்த சில நாட்களாகவே பனிபொழிவு அதிகமாக இருந்து வருவதால் பூக்களின் வரத்து வழக்கத்தைவிட குறைவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை (இன்று) வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த காரணங்களால் வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டி வாங்கிச்செல்கின்றனர். இதன்காரணமாக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கார்த்திகை மாதம் முழுவதும் தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

விலை விவரம்

 இதேபோல் மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:- அரளி ரூ.230, முல்லை ரூ.1.700, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.30, தாமரை ஒரு எண்ணம் ரூ.20, கோழிப்பூ ரூ.80, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் (100 எண்ணம்)ரூ.25, பட்டன் ரோஸ் ரூ.200, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு)ரூ.250, மஞ்சள் கிரேந்தி ரூ.65, சிவப்புக்கிரேந்தி ரூ.75, மஞ்சள் சிவந்தி ரூ.180, வெள்ளை சிவந்தி ரூ.250, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.120 என விற்பனையானது.


Post a Comment

0Comments
Post a Comment (0)