தளபதியின் ‘தீ தளபதி’ பாடல்!!…. பாடல் எழுத்தாளரின் உணர்ச்சிகரமான பதிவு

0

தளபதியின் தீ தளபதி பாடல் குறித்து எழுத்தாளர் விவேக் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் 2 வது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதியான நாளை வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்பாடலின் எழுத்தாளரான விவேக் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில் அவர், “முப்பது வருடம் முயற்சி, வியர்வை, நெஞ்சின் உள் அறைகளில் உரம் போட்டு வளர்த்த தீ” என்று பதிவிட்டிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் இப்பாடல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்ப்போடு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Post a Comment

0Comments
Post a Comment (0)