'வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்

0

வெண்ணிலா கபடி குழு’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ஹரி வைரவன் இன்று அதிகாலை காலமானார்.


 நீண்ட கால உடல் உபாதையால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்கள் வாயிலாக ஹரி வைரவனின் மனைவி மருத்துவச் செலவுக்காக உதவி கோரியிருந்தார். தன் கணவர் திடீரென கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்றும் அதன் பின்னர் தீவிர சிகிச்சைகளுக்குப் பின் வீட்டில் இருக்கிறார் என்றும் சர்க்கரை நோய், அதிக உடல் எடை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். தன் கணவரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவி வேண்டும் என்று கோரியிருந்தார். 


அவருக்கு நடிகர்கள் ப்ளாக் பாண்டி, கார்த்திக், சரவணா உள்ளிட்ட சில துணை நடிகர்கள் உதவி வந்ததாகத் தெரிகிறது.


இந்நிலையில் நீண்ட காலமாக பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஹரி வைரவன் இன்று அதிகாலை 12.15 மணியளவில் காலமானார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்சனேந்தலில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.Post a Comment

0Comments
Post a Comment (0)