நான் தளபதியுமல்ல... புரட்சித் தளபதியும் அல்ல - விஷால் பேச்சு

0

ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘லத்தி’. விஷால், சுனைனா நடித்துள்ள இந்தப் படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது. ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

4 மொழிகளில் தயாராகி இருக்கும் இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். விழாவில் விஷால் பேசும்போது, “ ரசிகர்கள் ‘புரட்சி தளபதி வாழ்க’ என்று சொல்ல வேண்டாம். நான் தளபதியுமல்ல, புரட்சித் தளபதியும் அல்ல. என் பெயர் விஷால். அவ்வளவுதான். இந்தப் படத்தின் இயக்குநர் வினோத், கதை கூறும் முன்பு, ‘நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க வேண்டும்’ என்றார்.

 முதலில் கதையைச் சொல்லுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை இந்தப் படத்தைப் பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இதில் 2 பேர் பேசப்படுவார்கள். ஒருவர், யுவன் சங்கர் ராஜா, மற்றொருவர், பீட்டர் ஹெய்ன். லோகேஷ் கனகராஜ், விஜய்யை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜய்யிடம் கதை சொல்லி இயக்குவேன்” என்றார்.


 முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


More News : LATHTHI Movie new Stills

Post a Comment

0Comments
Post a Comment (0)