ரசிகர்களை சந்திக்க பனையூர் வந்த விஜய் - வைரலாகும் புகைப்படம்

0

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார் நடிகர் விஜய். இந்த நிகழ்விற்கு அவர் என்ட்ரி கொடுத்தபோது எடுத்த போட்டோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

தற்போது அரியலூர், பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு விஜய் சார்பில் பிரியாணி விருந்தும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்தச் சந்திப்பின் போது அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த நவம்பர் வாக்கில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்திருந்தார்.

தற்போது அரியலூர், பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு விஜய் சார்பில் பிரியாணி விருந்தும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்தச் சந்திப்பின் போது அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)