கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஜெகதீஷ் (31). இதே பகுதியை சேர்ந்த பாட்டி வீட்டிற்கு 10 ஒயர் சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சிறுமியின் தாய் மற்றும் அவரது பாட்டி அருகிலுள்ள கடைக்கு சென்று உள்ளனர்.
அப்பொழுது சிறுமி மட்டும் பாட்டி வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜெகதீஷ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்குள் சென்று உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த ஜெகதீஷை பிடித்த உறவினர்கள் அவரை குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ஜெகதீஷை கைது செய்தனர்.