அஜித் ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராய்...

0

‘துணிவு’க்குப் பிறகு அஜித்குமாரின் 62 வது படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் வெளியிட இருக்கிறது.

இந்நிலையில், இதில் அஜித் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 2000 ம் வருடம் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அதில் மம்மூட்டிக்கு ஜோடியாக அவர் நடித் திருந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)