சரக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது..

0

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது 

கன்னியாகுமரி நாகர்கோவில்,

 தெலுங்கானா மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 2,600 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 30 வேகன்களில் வந்த அரிசி நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு, மத்திய அரசின் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது.


Post a Comment

0Comments
Post a Comment (0)