ஏகே 62 படத்துக்காக அஜித்தின் சிறப்பு பயிற்சி

0

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதைத்தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏகே62 படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான சிறப்பு பயிற்சிகளை அஜித் தொடங்கிவிட்டதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன

Post a Comment

0Comments
Post a Comment (0)