இப்படத்தின் விளப்பரத்துக்காக கேரளாவில் உள்ள சட்ட கல்லூரியில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகச்சியை படக்குழுவினர் நடித்தினர்.
அப்போது மேடையிலிருந்த அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவன் அத்துமீறு தவறாக நடந்து கொண்டார். அபர்ணாவின் கையை பிடித்து அவரின் அனுமதி இல்லாமல் தோல் மீது கைபோட்டார் அப்படி செய்த மாணவனின் பிடியிலிருந்து அபர்ணா பாலமுரளி நழுவியபடி தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
மாணவனின் இந்த செயலை பலரும் கண்டித்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் இது அருவெறுப்பான செயல் என்று சாடினார்.
இந்த சம்பவத்துக்கு சட்ட கல்லூரி மாணவர்கள் சங்கம் மன்னிப்பு கேட்டு முக நூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. நடிகைக்கு நேர்ந்த எதிர்பாராத சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.
அப்படி அத்துமீறிய அந்த மாணவரை இடை நீக்கம் செய்தது அந்த கல்லூரி நிர்வாகம்.