விஜய்யுடன் களமிறங்கிய ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் !

0

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11-ம் தேதி உலகமெங்கும் வெளியான வாரிசு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அர்ஜூன். இந்தி நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது இப்படம்.


இப்படத்தில் நடிக்கும் அர்ஜூன் தன் தோற்றத்தை மாற்றியுள்ளார். அவரது இந்த புதிய கெட்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கெட்டப்பை பார்க்கும் போது வில்லன் வேடம் போல தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)