உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை.!

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி விடுதியில் மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரன் (20). இவர் கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி பாராமெடிக்கல்ஸ் சயின்ஸ் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுமித்ரன் யாரிடமும் சரியாக பேசாமல் சோர்வாக காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்கள் எழுந்து பார்த்தபோது சுமித்ரன் அறையில் காணவில்லை. இதனால் அவர்கள் விடுதியில் மேல் மாடிக்குச் சென்று பார்த்த பொழுது சுமித்ரன் இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.


இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுமித்ரன் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்று அறையில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

அதில், பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக என்னால் இருக்க முடியவில்லை. இந்த உலகில் நான் பிறந்ததை பாவமாக கருதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)