மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகை ஶ்ரீ திவ்யா

0

நடிகை ஶ்ரீ திவ்யா 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஶ்ரீ திவ்யா.

இப்படத்தை தொடர்ந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி, மாவீரன் கிட்டு, மருது போன்ற படங்களில் நடித்தார் இதை தவிர ஒரு சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இறுதியாக இவர் நடித்த தமிழ் திரைப்படம் ஜீவா நடிப்பில் 2017-ம் தேதி வெளியான சங்கிலி புங்குலி கதவ திற. அதன் பின்னர் ஶ்ரீ திவ்யாவுக்கு படங்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மிக நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் பிரபு நடிக்கும் ரெய்டு படத்தில் ஜோடியாக மீண்டும் நடித்து வருகிறார். இதை தவிர மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்தை நடத்தி வருகிறார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)