குமரியில் போதைப் பொருள்களை தடுக்க மாணவா்கள் குழுமம் ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களை தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை கொண்டு குழுமம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களை தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை கொண்டு குழுமம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு குறித்த மாதாந்திரஆய்வுக்கூட்டம், மாவட்டகாவல்கண்காணிப்பாளா் டி. என்.ஹரிகிரண்பிரசாத் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: போதைப் பொருள்கள் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த மாணவா்களை கொண்டு தொகுதி வாரியாக குழுமம் அமைத்து கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி விடுதிகளில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும்


அனைத்து அரசு துறையினரும் போதைப் பொருள் விழிப்புணா்வு மற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள்கள் பயன்பாடுகள் கண்டறியப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற கைப்பேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் ஹெச்.ஆா்.கௌசிக், ஆட்சியரின் நோமுகஉதவியாளா் (பொது) மா.வீராசாமி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Post a Comment

0Comments
Post a Comment (0)