குமரி மாவட்டத்தில் இலையுதிர் காலம் தொடங்கியதால் ரப்பர் தோட்ட தொழிலாளிகள் வேலை இழப்பு ....

0

குமரி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ரப்பர் பால் வெட்டும் தொழிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. விளவங்கோடு, திருவட்டார், பத்மனாபபுரம் தாலுகாவிலும் அதை சுற்றியுள்ள மலையோர கிராமங்களிலும் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளது. 

இப்பகுதி தொழிலாளிகளுக்கு ரப்பர் பால் வெட்டும் தொழிலே பிரதானமானதாகும். மேலும் இந்த பகுதியில் அரசு ரப்பர் கழகம் மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களும் ஏராளமாக உள்ளன. இத்தோட்டங்களில் ஏராளமான ஆண்களும், பெண்களும் என ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். ரப்பர் தொழிலை முன்வைத்து இப்பகுதிகளில் தனியார் ரப்பர் பால் சேகரிக்கும் நிலையங்கள் அமைந்துள்ளது.


 இந்த ரப்பர் பால் சேகரிக்கும் நிலையங்களில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்கின்றனர்.தனியார் தோட்டங்களில் வெட்டி எடுக்கும் ரப்பர் பால் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோன்று ரப்பர் பால் எடுத்து உறைய வைத்து ரப்பர் சீட் தயாரித்து அவற்றை உலர்த்தி சிறு, குறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ரப்பர் ஷீட் வாங்கவும் இப்பகுதிகளில் ஏராளமான கடைகள் உள்ளது. இப்படி ரப்பர் தோட்டங்களை நம்பி ஏராளமான துணை தொழில்களும், அதில் ஈடுபடும் தொழிலாளிகளும் உள்ளனர். தற்போது குளிர்காலம் (டிசம்பர், ஜனவரி) முடிந்தவுடன் ரப்பர் மரத்தின் இலைகள் காய்ந்து உதிரத் தொடங்கிவிடும். 

அதன் பின்னர் மரத்தில் துளிர் விட துவங்கியதும் பால் வெட்டும் தொழில் நிறுத்தப்படும். அரசு ரப்பர் கழக தோட்டங்களில் 15 நாள் விடுமுறைஅளித்து மீண்டும் பணி தொடங்கப்படும். ஆனால் தனியார் தோட்டங்களில் துளிர் இலையாக மாறி அடுத்து வரும் மழைக்காக காத்திருந்து மழை பெய்து முடிந்த பிறகு பால் வடிக்கும் தொழில் தொடங்கப்படும். 

அதுவரை ரப்பர் மரங்களுக்கு சுமார் 2 மாத காலம் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் பால் வெட்டும் தொழிலை நம்பி வாழ்கின்ற அனைத்து மக்களும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த 2 மாதங்களும் தனியார் தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். உள்ளூரில் வேலை கிடைக்காதவர்கள் வேறு வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு செல்ல தொடங்கி உள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)