போலீசாருக்கான வாலிபால் போட்டியில் கன்னியாகுமரி சப்-டிவிசன் அணி சாம்பியன்

0

குமரி மாவட்டத்தில் போலீசாரிடம் விளை யாட்டை ஊக்குவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீசா ருக்கான கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. 

சப்-டிவி சன்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் போட்டியில் தக்கலை சப்-டிவிசன் அணியும் நாகர்கோவில் சப்-டிவிசன் அணியும் மோதியது. இதில் நாகர்கோவில் சப்-டிவிசன் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் குளச்சல் சப்-டிவிசன் அணியும், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணியும் மோதியது. இதில் கன்னியா குமரி சப்-டிவிசன் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணிகள் தேர்வு பெற்று உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோது கின்றன.

இன்று 2-வது நாளாக நாகர்கோவில் ஆயுதப் படை மைதானத்தில் போலீ சாருக்கான வாலிபால் போட்டி நடந்தது. கன்னியா குமரி சப் டிவிஷன் அணியும் குளச்சல் சப்-டிவிசன் அணியும் மோதியது. இந்த போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.

 இதில் கன்னியாகுமரி சப்-டிவிசன் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நாகர்கோவில் சப்-டிவிசன் அணியும், தக்கலை சப்- டிவிசன் அணியும் அடுத்த போட்டியில் ஆடியது. இதில் தக்கலை சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

இதைத்தொடர்ந்து தக்கலை சப்-டிவிசன் அணியும், கன்னியாகுமரி சப்-டிவிசன் அணியும் இறுதி போட்டியில் விளை யாடியது. இதில் கன்னியா குமரி சப்-டிவிசன் அணி வெற்றி பெற்று பரிசு பெற்றது. பரிசு பெற்ற அணி யினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டினார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சாம் வேதமாணிக்கம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கோ-கோ, பேட்மிண்டன், கபடி போட்டிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)