100 கோடி வசூல் செய்து சாதனை படத்தை தனுஷின் வாத்தி ..

0

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி வெளியான நாள் முதல் இன்று வரை சுமார் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி வெளியான திரைப்படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருந்தார், வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருந்தார்.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். நம் நாட்டில் கல்வி எப்படி வியாபாரமாகிறது என்ற கருத்தை மையக்கருத்தாக கொண்டு இப்படம் உருவாகியிருந்தது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது இருந்தபோதிலும் வசூலில் சாதனை புரிந்து உள்ளது. இப்படம் இதுவரையில் உலகமெங்கும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது

Post a Comment

0Comments
Post a Comment (0)