Home Nagercoil news பெண்களின் சபரிமலை; மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கொடியேற்றம் பெண்களின் சபரிமலை; மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கொடியேற்றம் Author - Kumari Sangamam March 06, 2023 0 கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன், பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான மாசிக்கொடை விழா கொடியேற்றம் விமரிசையாக தொடங்கியது. கோவில் தந்திரிகள் கொடியை ஏற்றி வைத்த நிலையில் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சி தலைவர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மனுக்கு மூன்று கால பூஜைகள் அத்தாள பூஜைகள் நடைபெறுவதோடு வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. பத்தாவது நாள் இரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடையும் நிலையில் அன்று உள்ளூர் விடுமுறையும் விடப்படுகிறது.கோவில் திருவிழாவை முன்னிட்டு குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5-மாவட்டங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Tags kanyakumari newsKumari NewsNagercoilNagercoil news Facebook Twitter Whatsapp Newer Older