இதையும் படியுங்கள்: குட்டி ரசிகையுடன் வீடியோ கால் பேசிய நடிகர் விஜய்
இருவரும் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரித்தபோது கொரோனாவுக்கு பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக பிரேமா மற்றும் முருகன் இருவரும் சேர்ந்து 3 மகன்களையும் வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பதும், 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து அகஸ்டினாள் குழந்தைகள் நல உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இரணியல் காவல் நிலையத்திற்கும், சுகாதார துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் மற்றும் திருவிதாங்கோடு சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
தகவல் அறிந்ததும் இரணியல் பேரூராட்சி தலைவி ஸ்ரீகலா முருகன், வார்டு கவுன்சிலர் சித்ரா, தக்கலை யூனியன் கவுன்சிலர் கோல்டன் மெல்பா மற்றும் ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். பிரேமா வீட்டிற்கு சென்ற இரணியல் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்களுடன் குழந்தைகள் நல உதவி மைய உறுப்பினர்கள் மேகலா, சரத் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். பின்னர் கலெக்டரிடம் ஆலோசனை நடத்திய பின்பு இச்சம்பவம் குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்
இதையும் படியுங்கள்: Viduthalai Movie Review
கருத்துரையிடுக