சமூக விரோத செயல்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட கன்னியாகுமரி நகரம்

0



இந்தியாவின்தென் கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக் கணக்கானஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இது தவிர நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும்சபரி மலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வரு கையும் அதிக அளவில் காணப்படும்.மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறைசீசனை யொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும். 

சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, பிக்பாக் கெட்போன்றசமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் கன்னியாகுமரி நகர பகுதியில்106-க்கும் மேற்பட்டலாட்ஜுகளும் 1000-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளும் ஏராள மானவீடுகளும் அமைந்து உள்ளன.இவற்றில்திருட்டு போன்றசம்பவங்களும் அடிக்கடிநிகழ்ந்து வருகின் றன.இதற்கிடையில் போக்குவரத்துநெரிசல் மிகுந்த நேரங்களில்வாகன விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன.கடத்தல் போன்ற சம்பவங்களும் நடந்துவருகின்றன. 

இதற்கிடையில் தினமும் கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய- மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் போன்ற முக்கிய விருந்தி னர்கள் வந்து சென்ற வண்ணமாக உள்ளனர்.

 இதனால் கன்னியாகுமரி நகர பகுதி முழுவதையும் போலீசார் பாதுகாப்பு நலன் கருதி தங்களது கட்டுப்பாட் டுக்குள்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நகர பகுதியில்உள்ள படகுத்துறை, முக்கடலும் சங்கமிக்கும்திரிவேணி சங்கமம்சங்கிலித்துறை கடற்கரைபகுதி, காந்தி மண்டப பஜார், பார்க்வியூ பஜார், கடற்கரை சாலை, மெயின்ரோடு விவே கானந்த புரம் சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, புதிய பஸ்நிலைய த்துக்கு செல்லும்கோவளம் ரோடு, விவேகானந்தாராக் ரோடு, சன்னதிதெரு, ரதவீதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அதி நவீன கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது


Post a Comment

0Comments
Post a Comment (0)