Home சினிமா ‘குமரிக் கண்டத்தில் ஏஜிஆர் ஆட்சி’ - சிம்புவின் 'பத்து தல' டீசர் எப்படி.? ‘குமரிக் கண்டத்தில் ஏஜிஆர் ஆட்சி’ - சிம்புவின் 'பத்து தல' டீசர் எப்படி.? Author - Kumari Sangamam March 03, 2023 0 நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சுமார் 1.37 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த டீசர். இந்தப் படத்தில் சிலம்பரசன், ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரை பார்க்கும் போது அவரது பாத்திரம் ஆன்டி ஹீரோ என தெரிகிறது. டீசர் நெடுக ‘ஏஜிஆர் ஒழிக’ என்ற குரல் ஒலிக்கிறது. ஆனால், அவரோ கம்ப ராமயணத்தை கையில் தாங்கியபடி நடந்து வரும் ஒரு ஷாட்டும் டீசரில் இடம்பெற்றுள்ளது. சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.மணல் அள்ளும் மாபியா கூட்டத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், கதையின் முக்கிய பாத்திரமான அரசியல் கட்சி தலைவராக நடித்துள்ளது போல தெரிகிறது Tags cinema newssimbuTamil cinema newsசினிமா Facebook Twitter Whatsapp Newer Older