நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் பெற்றோர் அவரை பரிசோத னைக்காக நாகர்கோவிலில் உ உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள். மாணவி கரு வுற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மாணவியின் பெற்றோ ரிடம் தெரிவித்தனர். மகள் 8 மாதம் கர்ப்ப மாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை கேட்டு அவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று பெற்றோர் விசாரித்த போது, மாணவி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமை யில் உல்லாசமாக இருந்த தாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் போலி சில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் சம்பந்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர். மாணவியை காதலித்து வரு வதாக கூறினார்.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமையில் உல்லாசமாக இருந்த தகவலையும் தெரிவித்தார்.இதற்கிடையில் கர்ப்பிணி யாக உள்ள மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் அனுமதித்து உள்ளனர்.
கருத்துரையிடுக