தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா பாதிப்பு 100- கடந்துள்ளது.


இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதில், கேரளா, மகாராஷ்டிரா, கோவாவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதன்கிழமை வரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிண்கை 89 ஆக இருந்தது.



இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது

Post a Comment

புதியது பழையவை