கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியின் மூலம் பெறப்பப்பட்டன. இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது.
சுமார் 896 பேர் தேர்வை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டதில், 92 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 804 பேர் தேர்வு எழுதினார். இந்த தேர்வு மையங்களில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி உட்பட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கருத்துரையிடுக