குமரியில் கறிக்கோழி விலை உயர்வு.


கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களையொட்டி கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

 கடந்த நவம்பர் மாதம் இறுதியில் கிலோ ரூ. 89-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி டிசம்பர் தொடக்கத்தில் ரூ. 96-க்கு விற்பனை செய்யப்பட்டது.

 பின்னர் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் என்பதால் விலை அதிகரிக்காமல் இருந்து வந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி கறிக்கோழி விலை உயர்ந் துள்ளது. 

அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதியன்று ரூ. 117-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறிக்கோழி, தற்போது ரூ. 20 உயர்ந்து கடைகளில் ரூ. 137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 கிராமப்புறங்களில் ரூ. 140 முதல் ரூ. 145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

புதியது பழையவை