ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவர் தனது மகள் பிரபாவை பக்கத்து ஊரான அழகன்விளையை சேர்ந்த கொத்தனார் ராஜேஷ் (39) என்பவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.
தற்போது கருத்து வேறுபாடு காரணமாக மகள் பிரபா கடந்த 5 மாதங்களாக. கணவரை பிரிந்து தந்தை வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னோடு அனுப்பி வைக்குமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமனார் முருகனை இடது பக்க மார்பில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முருகன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.
கருத்துரையிடுக