ரீத்தாபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்


தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமாங மக்களுடன் முதல்வர் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சி ஷாஜன் திரமண மண்டபத்தில் தொடங்கியது. 

குளச்சல் எம். எல். ஏ. பிரின்ஸ் தொடக்கி வைத்து பேசினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜேஸ்வரி, குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி , பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ், தலைவர் எட்வின் ஜோஸ், துணைத்தலைவர் விஜூமோன் மற்றும் கவுன்சிலர்கள், வருவாய்த்துறையினர்  உள்பட அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 புதிய மின் இணைப்பு, பட்டா மாறுதல், கட்டுமான வரிபட ஒப்புதல், முதியோர் பென்சன்  உள்பட 324 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

புதியது பழையவை