தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்.. மருத்துவமனையில் போலீசார் குவிப்பு!


சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை வாசலில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 344 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.



இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காலையில் உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் பரிசோதனை செய்வதற்காக இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.


Post a Comment

புதியது பழையவை