கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அழகனார் கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சங்கு மனைவி ஷீலா(46).
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வழக்கம் போல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் ஆலஞ்சியை சேர்ந்த வாலிபர் ஜெபின் ராஜ்(29)இவரது வீட்டு கதவை தட்டினார்.
அப்போது கதவைத் திறந்த ஷீலாவிடம் உனது 2 வது மகளை திருமணம் செய்துதா என கேட்டு மிரட்டியுள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த ஷீலா, நள்ளிரவு வீட்டிற்குள் வந்து பெண் கேட்கும் ஜெபின் ராஜை துரத்தினார். அந்த நேரத்தில் தான் கையில் வைத்திருந்த புல் அறுக்கும் அரிவாளை ஷீலாவின் கழுத்தில் வைத்து கொன்று விடுவதாக ஜெபின் ராஜ் மிரட்டினார்.
உடனே ஷீலா சத்தம்போட்டார். அவரது சத்தத்தை
கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். சுதாரித்துக் கொண்ட ஜெபின் ராஜ் தப்பி ஓடினார். உடனே இதுகுறித்து ஷீலா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். சுதாரித்துக் கொண்ட ஜெபின் ராஜ் தப்பி ஓடினார். உடனே இதுகுறித்து ஷீலா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீசார் தப்பி ஓடிய ஜெபின் ராஜை(29) மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கருத்துரையிடுக