குமரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை



சுசீந்திரம் போலீஸ் சரகம் மணிக்கட்டிபொட்டல் அருகில் உள்ள கீழகுஞ்சன்விளையைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்திரா (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் லட்சுமணன் வியாபாரத்துக்காக இந்திராவின் நகையை வாங்கி அடகு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நகையை திருப்பிக்கொடுக்காததால் மனம் உடைந்த நிலையில் இருந்த இந்திரா நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவருடைய கணவர் லட்சுமணன் கொடுத்த புகாரின்பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இந்திராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

புதியது பழையவை