பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஜி என்ற காசி . இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலிஸ்சார், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் காசி அனைத்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது
இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதானார்.
காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இந்த வழக்கில் நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவதித்து வரும் நாகர் கோவில் காசி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மேல் முறையீட்டு மனு குறித்து நாகர்கோயில் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
கருத்துரையிடுக