தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், தமிழக அரசு ரூ. 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்வதை எதிர்த்தும், தேர்தல் கால வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பொன் பாக்கிய தீபா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பிரபா, ராஜலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.


கருத்துரையிடுக