விடுதலை படத்தின் ப்ரீக்வல் மற்றும் இரண்டாம் பாகமாக அமைந்துவிட்டது இந்த படம். தேடப்படும் ஆளான வாத்தியார் எனும் பெருமாள் கைதான பிறகு நடப்பதை ஒரு பக்கம் காட்டியிருக்கிறார் வெற்றிமாறன். மறுபக்கமோ பள்ளி ஆசிரியரான பெருமாள் நியாயமான கோபத்தால் வாத்தியாராக மாறுவதை காட்டியிருக்கிறார்.
முதல் படம் குமரேசனின் கதையாக இருந்தது. இது பெருமாளின் கதை. கதை நமக்கு தெரிந்தது போன்று இருந்தாலும் அதை திரையில் காட்டிய விதத்தை சுவாரஸ்யமாக்கிவிட்டார் வெற்றிமாறன். வசனங்களை வைத்து நம் உணர்ச்சிகளை மாற வைத்திருக்கிறார் வெற்றிமாறன். வழி நடத்த தலைவர் முக்கியம் இல்ல தத்துவம் தான் முக்கியம், நல்லவங்களா இருக்கிறதனுனால மட்டும் இந்த சமூகத்துல எந்த கோட்பாடையும் மாத்திட முடியாது ஆகிய வசனங்கள் நெத்திப்பொட்டில் அடித்தது போன்று இருக்கிறது.

பெருமாள்(விஜய் சேதுபதி), மகாலட்சுமி(மஞ்சு வாரியர்) இடையேயான ரொமான்ஸ் ரசிக்க வைக்கிறது. வெற்றிமாறனின் படங்களில் அனைத்தும் விரிவாக காட்டப்படும். அதற்கு விடுதலை 2 விதிவிலக்கு அல்ல. போராளிகள் நியாயத்திற்கான தேடுதலின்போது சில சமயம் வழிதவறிப் போவதையும் காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.
அதிகாரிகள் இடையே நடக்கும் விவாதம் நம்மை கவர்கிறது. தலைமை செயலராக வரும் ராஜீவ் மேனன் தனித்து தெரிகிறார்.பெருமாள் வாத்தியாராகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அப்பாவியாக, தோழராக, புரட்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர்.
படத்தில் சூரிக்கு சிறு கதாபாத்திரம் என்பதால் அதை முதல் பாகத்திலேயே வைத்திருந்திருக்கலாம். இரண்டாம் பாகத்தில் வைத்தது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சேத்தன் தன் அபார நடிப்பால் கவர்ந்துவிட்டார். அவர் நடிக்கிறார் என்பதை மறந்து தியேட்டரில் உள்ளவர்கள் எல்லாம் சேத்தனை சபிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் சிறு கதாபாத்திரத்தில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள் ..
Viduthalai2 Rating - 3.5 / 5

கருத்துரையிடுக