கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் உணவருந்திய 4 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்யாததைக் கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வருவாய்த்துறையினரும் போலீசார் வந்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விடுதியில் உணவும், குடிநீரும் முறையாக வழங்கப்படுவதில்லை என மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
கருத்துரையிடுக