குழித்துறை ஆற்றின் குறுக்கே நடை பாதை பராமரிப்பு பணி துவக்கம்




குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே குழித்துறைக்கும் வெட்டுவெந்நிக்கும்  இடையே நடைபாதை பாலம்  உள்ளது. தற்பொழுது வெயில் சீசன் என்பதால் பாலம் மடைப்பகுதி வழியாக தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.

      குழித்துறை ஜங்ஷன் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக  காணப்படுவதால் இது வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பைக் செல்வது வழக்கம். இதனால் பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் உள்ளே உள்ள கம்பி  லேசாக தெரிந்தது. மேலும் சில பகுதியில் மேல் மட்ட ஜல்லி பெயர்ந்த நிலையில் காணப்பட்டது.
        இதனால் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 5 லட்சத்து 75 ஆயிரம் செலவில் மேல்பகுதி கான்கிரீட் ட்ரில்லிங் மிஷின் மூலம் அகற்றப்பட்டு கான்கிரீட் போடப்பட உள்ளது. மேலும் பாலத்தின்  இருபுறம் உள்ள பார் கம்பி அகற்றப்பட்டு உறுதியான கம்பி போடப்பட உள்ளது.
      இதற்கான பணி நேற்று துவங்கியது. கான்கிரீட் போட்டு வெயிலில் உலர வேண்டி இருப்பதால் சுமார் 25 நாள்கள் இந்த பகுதி வழியாக பைக் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பணி முடிந்த பிறகே மீண்டும் பைக் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

Post a Comment

புதியது பழையவை