படிப்பு வராவிட்டாலும் கல்லூரியில் கெத்தாக சுற்றி வரும் மாணவன் ராகவன்(பிரதீப் ரங்கநாதன்). எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் ராகவனுக்கு பெற்றோர், நண்பர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். கல்லூரி முதல்வர் கூட சரியாக படிக்காத ராகவனுக்கு ஆதரவாக இருக்கிறார்.
குறுக்கு வழியில் வாழ்க்கையிலும், வேலையிலும் முன்னேறுகிறார். இதுவே வேறு ஏதாவது படத்தில் வந்திருந்தால் வழக்கமான சீன் தான் என சொல்லலாம். ஆனால் டிராகனில் அப்படி சொல்ல முடியாத அளவுக்கு அழகாக காட்டியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. ராகவன், கீர்த்தி(அனுபமா பரமேஸ்வரன்) காதல் பிரேக்கப் ஆகும் நிலையில் இருக்கும் வரை அவர்களின் காதல் கதையை காட்டாதது.சோகப் பாடல் மூலம் அவர்களின் காதலை காட்டியது எல்லாம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துவிட்டது.

ராகவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள எதுவும் செய்யும் காதலியாக இருக்கிறார் கீர்த்தி. டிராகன் படத்தில் வரும் கல்லூரி நட்பு, கதாபாத்திரங்கள் எல்லாம் அஸ்வத் மாரிமுத்துவின் முதல் படமான ஓ மை கடவுளேவை நினைவூட்டுகிறது. அது டிராகனுக்கு கை கொடுக்கவும் செய்திருக்கிறது. மேலும் இது உங்களுக்கு சொன்னா புரியாது சார் வசனத்தையும் டிராகனில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
தொடர்ந்து தவறான முடிவுகள் எடுத்தாலும் ராகவன் என்கிற டிராகனை நமக்கு பிடிக்க வைத்துவிட்டார். ராகவனாகவே மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்தியாக நன்றாக நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். படம் ஜாலியாக சென்றாலும் வாழ்க்கை குறித்து நம்மை சீரியஸாக யோசிக்க வைக்கிறது. பாடல்களை படத்தில் திணிக்கவில்லை. அழகாக கதையோடு சேர்ந்தே வந்திருக்கிறது.
ஓ மை கடவுளே படத்தை போன்றே டிராகன் படமும் ரசிக்க வைக்கிறது, ஃபீல் பண்ண வைக்கிறது, யோசிக்க வைக்கிறது.
டிராகன்- நம்பி பார்க்கலாம்
டிராகன்- நம்பி பார்க்கலாம்
Dragon - 3.5 / 5
கருத்துரையிடுக