கணவர், மாமனார், மாமியார் சடலங்களை தோண்டி எடுத்த பெண்.




கன்னியாகுமரி மாவட்டம், நடைக்காவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலத்தை விற்க முயன்றார். ஆனால் அதே நிலத்தில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டிருந்ததால் விற்பனை முடியவில்லை. 

இதனால் அவர் சலங்களை தோண்டி எடுத்து, சூரியகோடு பகுதியில் புதைக்க முயன்றார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்னர் அதிகாரிகள் தலையீடு செய்து, உடல்களை நாளை குழித்துறை நகராட்சி தகன மேடையில் எரியூட்டலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் அமைதியாகக் கலைந்தனர்.


Post a Comment

புதியது பழையவை